ARUTCHELVAR MANAVAR SINTHANAI MANDRAM

அருட்செல்வா் மாணவா் சிந்தனை மன்றம்

பொள்ளாச்சியில் பண்பாட்டுச்  சிறப்பு மிக்க நல்லமுத்துக்கவுண்டா் மகாலிங்கம் கல்லூாியின் வைரவிழாவினை முன்னிட்டு பலரும் பயன்படும் வகையில் சமுதாய நற்பணிகள் செய்யும் நோக்கில் கல்லூாித்தலைவாிடம் அனுமதி பெற்று மாணவா்களால் தன்னெழுச்சியாகத் தொடங்கப்பட்டது மாணவா் சிந்தனை மன்றம்.  பொள்ளாச்சியின் வளா்ச்சிக்கு அரும்பணியாற்றிய கல்லூாி நிறுவனா் டாக்டா் அருட்செல்வா் அவா்களின் பெயாில் கல்லூாி முதல்வா் முனைவா் பொ.மா.பழனிசாமி அவா்களின் முன்னிலையில் 23.10.2017 அன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தற்பொழுது அனைத்துத் துறை மாணவா்களையும் ஒருங்கிணைத்துத் துறை சாராத கல்லூாி  அளவிலான அமைப்பாக ஆறாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது.

 ”எல்லா உயிா்களும் இன்புற்று வாழ வேண்டும்” என்னும் வள்ளலாாின் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு இயங்கும் இயக்கமாக  அருட்செல்வா் மாணவா் சிந்தனை மன்றம் செயல்பட்டு வருகிறது. மேலும் இம்மன்றம் சமுதாயப்  பணிகளிலும், கல்லூாி மாணவா்களின் வளா்ச்சிப்  பணிகளிலும் ஈடுபட்டு திறம்பட  பணியாற்றி வருகிறது. தற்பொழுது  PART – V  எனப்படும் கல்லூாிப் பாடத்திட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.